Home புதினங்களின் சங்கமம் மனைவியுடன் நீண்ட காலமாக கள்ளத தொடர்பு! செந்தூரனை கொலை செய்த கணவன்! நீண்ட தூரம் இழுத்துச்...

மனைவியுடன் நீண்ட காலமாக கள்ளத தொடர்பு! செந்தூரனை கொலை செய்த கணவன்! நீண்ட தூரம் இழுத்துச் சென்றது ஏன்? தமிழர் பகுதியில் சம்பவம்!

கற்பிட்டி – தேத்தாபொளயில் ஆடைத் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணிப் பகுதியில் உள்ள நீர் நிறைந்த பள்ளத்தில் சடலம் ஒன்று கிடப்பதாக நுரைச்சோலைப் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தேத்தாபொள, நாயக்கர்சேனை வீதியைச் சேர்ந்த வடிவேல் செந்தூர் (வயது 45) என்பவரே ஆடைத் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணியிலுள்ள நீர் நிறைந்த பள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர் உடனடியாகப் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண விபத்தாக இருக்கலாம் என்ற கோணத்தில் பார்க்கப்பட்டாலும், உயிரிழந்தவரின் உடலில் காணப்பட்ட கொடூரமான காயங்களையும் வீக்கங்களையும் கண்டு சந்தேகமடைந்த நுரைச்சோலைப் பொலிஸார், தடயங்களைச் சேகரித்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் விளைவாக, பாலாவி கரம்பைப்பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் துரிதமாகக் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு மரப்பொல்லுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது வழங்கப்பட்ட வாக்குமூலத்தின்படி, திங்கட்கிழமை (19.10.2026) அதிகாலை 2.00 மணி முதல் 2.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இக்கொலை அரங்கேறியுள்ளது. தனது மனைவியுடன் வடிவேல் செந்தூர் நீண்டகாலமாக முறைகேடான தொடர்பைப் பேணிவந்ததாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாகவே அவரை மரப்பொல்லுகளால் கொடூரமாகத் தாக்கியதாகவும் சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளாகி நிலைகுலைந்தவரை சும்மா விடாமல், சுமார் 12 மீற்றர் தூரம் தரையோடு தரையாக இழுத்துச் சென்று தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் தள்ளிவிட்டுத் தப்பியோடியதாகவும் அவர் பொலிஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரைப் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், நுரைச்சோலைப் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் டி.ஜி.எம்.பி. விமலசிரி உள்ளிட்ட சிறப்புக் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments