பெண்கள் நால்வர் உள்ளிட்ட எழுவரை பலிவாங்கிய கொரோனா: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் இன்று மேலும் 7 கொரோனா மரணங்கள் பதிவாகின. இவற்றுடன் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா மரணங்கள் 483 ஆக அதிகரித்துள்ளன.
87, 89, 78, 73, 63, 63, 63 வயதுகளையுடைய கொழும்பு 15, கொழும்பு 05, கொழும்பு 15, பிலியந்தலை, பிலிமத்தலாவை, கொழும்பு 02, கலேவல ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 3 ஆண்கள், 4 பெண்களின் கொரோனா மரணங்களே இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இன்று இதுவரை 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர் தொகை 83,705 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 598 பேர் குணமடைந்து வெளியேறினர். இவர்களுடன் நாட்டில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 80 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் இன்றுவரை 5 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
