புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி்யில் இன்று ஐவருக்கு கொரோனா!! 600 பேர் தனிமைப்படுத்தல்!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 12 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்,

கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் நேற்று முன்தினம் தொற்றுக்கு உள்ளானவரின் மருமகன், அவருடைய கடையில் பணியாற்றிய இளைஞர் மற்றும் அவருடைய கடைக்கு அருகாமையில் தண்ணீர் விற்பனை கடையில் பணியாற்றும் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மூவரும் தென்னிலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றுவந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் இவர்களுடன் தொடர்பிலிருந்த அறுநூறு பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டவர்களில் ஏழு பேர் காங்கேசன்துறை கடற்படை முகாமினைச் சேர்ந்த கடற்படையினர் என்றும் கேதீஸ்வரன் அருவிக்குத் தெரிவித்தார்.