யாழ் பிரபல வர்த்தகரின் 18 வயது மகள் 39 வயதான வர்த்தகரின் நண்பனுடன் ஓட்டம்!!
யாழில் பிரபல வர்த்தகரின் மகளான 18 வயதான பிரபல தனியார் பெண்கள் பாடசாலை ஒன்றின் மாணவி, வர்த்தகரின் நண்பனான பண்ணைகள் பலவற்றின் உரிமையாளராக உள்ள 39 வயதான குடும்பஸ்தருடன் ஓட்டம் பிடித்துள்ளார்.
இதனையடுத்து மாணவியின் தாயார் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். அத்துடன் மாணவியின் தாயாரின் உறவுகள் இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிட முற்பட்ட போதும் வர்த்தகர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளாராம். தனது நண்பர்கள் சிலரின் உதவியுடன் தனது மகளுடன் ஓட்டம் பிடித்த நண்பனிடம் சமாதான முறையில் பேசி மாணவியை திரும்ப அழைக்கும் முயற்சியில் இரகசியமாக ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகின்றது. குறித்த வர்த்தகரும் மாணவியுடன் ஓடிப்போன நண்பரும் பளை மற்றும் வேறு இடங்களில் பண்ணைகள் வைத்துள்ளார்கள் என்றும் அங்கு இவர்கள் இருவரும் பல்வேறு சமூகவிரோத நடவடிக்கைகள் மற்றும் பெண்கள் தொடர்பான தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எனவும் குறித்த வர்த்தகர்களுடன் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வர்த்தகரின் நண்பன் ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தை என்பதுடன் இவனின் தவறான செயற்பாடுகளால் மனைவி மற்றும் குழந்தைகள் இவனை விட்டு அண்மையில் பிரிந்து வாழ்ந்துவருவதாகவும் தெரியவருகின்றது.
குறித்த வர்த்தகரின் மகளும் மொடேன் உடைகளுடன் நவநாகரிகமான முறையில் நிகழ்வுகளில் வலம்வருபவர் என வர்த்தகரின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


