புதினங்களின் சங்கமம்

வடக்கு ஆளுநர் பதவி ஈ.பி.டி.பி வசமாகின்றது??

 

வடக்கு மாகாண ஆளுநர் பதவி ஈ.பி.டி.பியிடம் கொடுக்கப்படவுள்ளதாக ஈ.பி.டி.பி கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் தமக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டக்ளஸ் தேவானந்தவாவுக்கு முக்கிய அமைச்சர் பதவியும் அவரது கட்சிக்கு ஆளுநர் பதவிக்குப் பொறுப்பாக யாரை நியமிக்கின்றது என்ற பொறுப்பும் வழங்கப்படும் எனவும் அவர்கள் தமக்கு நெருக்கமானவர்களுக்குக் கூறியுள்ளார்களாம்.

இதே வேளை வடக்கின் ஆளுநர் பதவியை இராணுவத்தில் பணியாற்றிய ஒருவருக்கு வழங்கவே கோத்தபாய சிந்தித்திருந்தார் எனவும் தற்போது அவரது அண்ணன் மகிந்த அவ்வாறு செய்யாது சிவில் நபருக்கு வழங்க வேண்டும் என முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.