புதினங்களின் சங்கமம்

திருமலை சொகுசு பஸ் கந்தளாய் குளத்தில் இறங்கியது!!

கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் இன்று (04) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் 34, 56 மற்றும் 26 வயதுடைய மூவரே காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். குறித்த பஸ்  பாதையை விட்டு விலகி கந்தளாய் குளத்துக்குள் இறங்கிய நிலையில் காணப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.