15 வயது மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து காமலீல!! 35 வயதான தமிழ் பாட ஆசிரியர் கைது!!
நீர்கொழும்பு பகுதியில் பாடசாலை மாணவியொருவரை போதைக்கு அடிமையாக்கி துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம்சாட்டப்படும் இளம் தமிழ் ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தரம் 10இல் கல்வி கற்கும் மாணவியே துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். சில காலமாக ஆசிரியர் அந்த மாணவியுடன் அத்துமீறி நடப்பதாக கூறப்படுகிறது.
மாணவியை உளவியல் ஆலோசனைக்கு அழைத்து செல்வதாக குறிப்பிட்டு, தனது வாகனத்தில் அழைத்துச் செல்லும் ஆசிரியர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன்போது மாணவிக்கு போதை மாத்திரை வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
35 வயதான, திருமணம் முடித்த தமிழ் ஆசிரியர் நாளை (27) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாணவி மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதில், துஷ்பிரயோகம் செய்யப்பட்டது உறுதியானது.

