பிரதமர் பதவியிலிருந்து விலகமறுத்தார் ரணில்!! நடக்கப் போவது என்ன?
நடந்து முடிவடைந்துள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச அமோக வெற்றியீட்டியுள்ளமையால் அவர்கள் ஆட்சியமைப்பதற்கு வசதியாகப் பிரதமர் பதவியிலிருந்து விலகி வழிவிடுமாறு பங்காளிக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்திய போதிலும் அதற்கு இணங்கப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மறுத்து விட்டார்.
புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஸ தெரிவாகியுள்ள நீலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று(17) பிற்பகல் அவசரமாக அமைச்சரவை கூடியது. இதன்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியிலிருந்து விலக மறுத்துள்ளாரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேவையெனில் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடாத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

