மட்டக்களப்பில் காட்டுக்குள் இளம் தம்பதியின் சடலங்கள் மீட்கப்பட்டதால் பரபரப்பு!!!
மட்டக்களப்பு – வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி, மானாவாரிக் கண்டம் எனும் பகுதியில் இளம் குடும்பஸ்தர்களான கணவனதும் மனைவியினதும் சடலங்கள், இன்று (16) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளனவெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
நாகதம்பிரான் கோயில் வீதி, கிண்ணையடி வாழைச்சேனை எனும் முகவரியைச் சேர்ந்த நமசிவாயம் குணம் (35) விநாயகன் தேவி (30) ஆகிய இருவரினதும் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.
வாகனேரி மானாவாரிக் கண்டத்திலுள்ள வயல் வாடியியில் மனைவியும் அங்குள்ள காட்டுப் பகுதியில் கணவனும் சடலமாகக் கிடைப்பதை அவதானித்த அப்பகுதியால் சென்றவர்கள் பொலிஸாருக்கும் உறவினர்களுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
அதனடிப்படையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், இருவரினதும் சடங்களை மீட்டுள்ளனர்.
சடலங்கள், உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

