வடக்கு மாகாண ஆளுநருக்கு புழுச் சாப்பாடு கொடுத்த கிளிநொச்சி பாரதி ஹோட்டல்!! (Photos)

கிளிநொச்சியில் சாப்பாட்டுக்குள் புழு இருந்தது என கூறப்பட்டு, உணவகம் ஒன்றை பூட்ட
உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், அந்த உத்தரவை பொருட்படுத்தாமல் உணவகம் இயங்கிய நிலையில்,
வடக்கு ஆளுனர் இரவு 10 மணிக்கு உணவகத்திற்கு சென்று, இழுத்துமூட வைத்துள்ளார்.

நேற்று (27) இந்த சம்பவம் நடந்தது.

நேற்று கிளிநொச்சியில் வடக்கு ஆளுனர் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது கிளிநொச்சியிலுள்ள பிரபல உணவகமான பாரதி ஸ்டார் உணவகத்தில் ஆளுனர்,
அதிகாரிகளிற்கான மதிய உணவு கொள்வனவு செய்யப்பட்டது.

வாங்கப்பட்ட உணவு பார்சல் ஒன்றில் கத்தரிக்காய் கறியில் புழு இருந்தது, அதிகாரிகளிற்கு
அறிவிக்கப்பட்டு, உணவகத்தை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
உடனடியாக உணவுகம் மூடப்பட்டாலும், சற்று நேரம் கழித்து திறந்து வழக்கம் போல இயங்கியது.

இந்த தகவலை இரவு அறிந்த ஆளுனர், இரவு 10 மணியளவில் நேரடியாக மீண்டும் கிளிநொச்சிக்கு
சென்று, உணவகத்திற்கு சென்றார். அதிகாரிகளையும் அங்கு அழைத்து. உணவகம் மீள எப்படி
திறக்கப்பட்டது என வர்த்தக நிலைய உரிமையாளரை கறாராக கண்டித்தார். அத்துடன், உடனடியாக
உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பணித்ததுடன், இரவே உணவகத்தை பூட்ட வைத்தார்.

error

Enjoy this blog? Please spread the word :)