தாஜ்மகாலுக்குள் நுழைந்த ஜந்து!! பதறியடித்து ஓடிய உல்லாசப் பிரயாணிகள்!!
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் வளாகத்திற்குள் மலைப்பாம்பு ஒன்று நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மகாலை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர்.
இந்த நிலையில், 9 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு தாஜ்மகாலின் வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு அருகே ஊர்ந்து வந்துள்ளது. முதலில் இதனை யாரும் பார்க்கவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் பாம்பைப் பார்த்தும் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த செய்தி காட்டுத் தீயாக பரவியதால் தாஜ்மாகாலுக்குள் இருந்த சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. அதிக பாம்புகள் வந்திருக்கலாம் என்ற பயத்தின் அடிப்படையில் அவர்களும், நாலாபுறம் சிதறி அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
அவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பொலிசார் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து பாம்பை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள். பின்னர் ஒருவழியாக பாம்பு பிடிக்கப்பட்டவுடன் பரபரப்பு அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

