புதினங்களின் சங்கமம்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின் வட மாகாண ஆளுநர் பதவிக்கு இப்போதே அடிபிடி!! அடுத்த ஆளுநர் யார்?

 

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் பரபரப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் முக்கிய இரு வேட்பாளர்களுடனும் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்கட்சிகள் தொடர்ச்சியான பேரம்பேசல்களில் ஈடுபட்டுள்ளன. அந்த பேரம் பேசல்களில் முக்கிய அம்சமாக இருப்பது அடுத்த வடக்கு மாகாண ஆளுநர் பதவி யாருக்கு என்பதே. சஜித் தேர்தலில் வெற்றிபெற்றால் தமிழரசுக்கட்சி கை காட்டும் நபருக்கே ஆளுநர் பதவி கொடுக்க வேண்டும் என்ற உடன்படிக்கையும் இரகசியமாக முடிக்கப்பட்டுள்ளதாம். அத்துடன் கோத்த வெற்றி பெற்றால் அவருடன் தற்போது ஒட்டிக் கொண்டிருக்கும் பல்வேறு கட்சிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் குறித்த ஆளுநர் பதவி தொடர்பாக அவாவில் இருக்கின்றனராம். முன்னால் வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாளுக்கும் அந்த ஆசை இருக்கின்றதாம். அத்துடன் டான் ரீவி முதலாளி குகநாதன் மற்றும் அங்கஜனின் ரவுடி அப்பா இராமநாதன் போன்றவர்களும் அந்தப் பதவி மீது கண் வைத்து காரியத்தை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.