அரபி கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “க்யார்” புயலாக மாறியது!
அரபி கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை புயலாக மாறியுள்ளது.
இந்த புயலுக்கு க்யார் என பெயரிடப்பட்டுள்ளதுடன், இந்த புயல் மும்பையில் இருந்து 380 கி.மீ தொலைவில் தென்மேற்கு திசையில் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் குறித்த புயலானது அடுத்த 24 மணித்தியாலத்தில் அதி தீவிர புயலாக மாறும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த சில நாட்களாக அரபி கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வந்த நிலையில், லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய கடற்பகுதிகளுக்கு தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

