Home புதினங்களின் சங்கமம் பெற்றோரே அவதானம்!! யாழில் திருமணமான ஆசிரியருக்கு தொடர்ந்து காதல் துாது விடும் ஏ.எல் மாணவி!! ஆசிரியரி்ன...

பெற்றோரே அவதானம்!! யாழில் திருமணமான ஆசிரியருக்கு தொடர்ந்து காதல் துாது விடும் ஏ.எல் மாணவி!! ஆசிரியரி்ன மனைவி அந்தரிப்பு!!

யாழி்ல் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கற்பித்து வந்த பட்டதாரி குடும்பஸ்தர் தற்போது தனது கற்றல் செயற்பாடுகளை குறித்த கல்விநிலையத்தில் இருந்து நிறுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது. இதற்கு காரணம் அக் கல்வி நிலையத்தில் கற்று வந்த யாழ் நகரப் பகுதியில் பிரபல பெண்கள் பாடசாலையில் கற்றுவரும் ஏ.எல் படிக்கும் மாணவியே எனத் தெரியவருகின்றது.

வலிகாமம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் வர்த்தகப்பிரிவில் குறித்த ஒரு பாடம் கற்பித்து வந்த இளைஞனுக்கு வட்சப் மூலம் குறித்த மாணவி தொடர்ச்சியாக காதல் தொடர்பான தகவல்களை அனுப்பி வந்துள்ளார். குறித்த இலக்கம் யாருடையது என தனது வட்சப் குறுாப் மூலம் அறிந்து குறித்த ஆசிரியர் அந்த மாணவியை தனிப்பட்ட முறையில் கண்டித்தும் மாணவி திருந்தவில்லை. இதன் தொடர்ச்சியாக ஆசிரியரின் பிறந்ததினம் அன்று மாணவி தனது நண்பியுடன் தனது வீட்டில்இருந்து 5கி.மீ தொலைவில் இருந்த ஆசிரியரின் வீடு தேடிச் சென்று வாழ்த்து தெரிவித்ததுடன் ஆசிரியருக்கு பரிசுப் பொருள் கொடுத்த போது அதனை ஆசிரியர் வாங்கமறுத்துள்ளார். அதன் பின்னர் மனைவி அதனை வாங்குமாறு கூறவே ஆசிரியர் அதனை வாங்கியதாகத் தெரியவருகின்றது. ஆசிரியருடன் செல்பி எடுக்க முற்பட்ட போது அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார். தன் மீது மாணவிக்கு இருந்த காதல் மோகம் தொடர்பாக ஆசிரியர் தனது மனைவிக்கு தெரிவிக்கவில்லை.

தொடர்ச்சியாக மாணவி அனுப்ப்பி வந்த காதல் பதிவுகளை அடுத்து மாணவியின் வட்சப் இலக்கத்தை ஆசிரியர் தடைசெய்திருந்தார். தனது வட்சப் இலக்கம் தடைசெய்யப்பட்டதை அறிந்த மாணவி இன்னொரு இலக்கத்திலிருந்து ”டேய், கள்ளா, எனது மனதை திருடியவனே” என்ற தலைப்புகளுடன் காதல் பதிவுகளை அனுப்பிய போது அதனை ஆசிரியரின் மனைவி தற்செயலாக பார்த்து அதிர்ந்து அது தொடர்பாக தனது கணவனிடம் விளக்கம் கேட்ட போதே மாணவி தொடர்பாக ஆசிரியர் தனது மனைவிக்கு கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த கல்வி நிலையத்திற்கு கணவன் கற்பிக்க போவதை மனைவி தடுத்து நிறுத்தியதுடன், அந்த மாணவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனைவி அச்சுறுத்த முற்பட்ட போது குறித்த தொலைபேசி இலக்கம் அம் மாணவயின் அம்மம்மா வின் இலக்கம் என தெரியவந்துள்ளது. அந்த இலக்கத்திற்கு வட்சப் நிறுவி மாணவி ஆசிரியருக்கு காதல் காவியம் அனுப்பி வந்துள்ளது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் ஆசிரியரின் மனைவி மாணவியின் வீட்டுக்குச் சென்று இது தொடர்பாக முறையிட முற்பட்ட போது அங்கு முரண்பாடு எழுந்துள்ளது.

மாணவியின் தாயார் ஆசிரியரின் மனைவியை தாக்க முற்பட்டதாகவும் ஆசிரியரின் மனைவியின் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது. அதன் பின்னர் ஆசிரியா் கற்பித்த ரியூசனுக்கு மாணவியின் பெற்றோர் சென்று முரன்பட்டுள்ளதாகவும் தற்போது ஆசிரியரே மாணவியை மனம் மாற வைத்து செயற்பட்டதாக பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு பொலிசாரிடம் முறையிடும் நிலைக்குச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மாணவி தனது ஆசிரியருக்கு அனுப்பிய காதல் மெசேஜ்கள் சிலவற்றை ஆசிரியரின் மனைவி எமக்கு அனுப்பி வைத்துள்ளார். அவற்றை இங்கு தந்துள்ளோம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments