Home புதினங்களின் சங்கமம் முல்லைத்தீவு விபத்துல் சங்கரப்பிள்ளை பலி!

முல்லைத்தீவு விபத்துல் சங்கரப்பிள்ளை பலி!

முல்லைத்தீவில் ஹெப் ரக வாகனம் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 65 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து நேற்று (23.11.2026) மாலை 6.30 மணியளவில் முல்லைத்தீவு – வட்டுவாகல் வீதியில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு நகரிலிருந்து வட்டுவாகல் நோக்கிப் பயணித்த ஹெப் ரக வாகனம், முன்னால் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் வீதியின் மறுபக்கத்திற்குத் திரும்ப முற்பட்டபோது அவர் மீது மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது படுகாயமடைந்த முதியவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய சங்கரப்பிள்ளை செல்லத்துரை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments