வடக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர் எந்திரி. ராஜகோபு பதவியிலிருந்து இறக்கப்பட்டு கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – பொறியியல் சேவைகள் பிரிவுக்கு இடமாற்றம் செய்ய்பட்டுள்ளார். வவுனியாவில் உள்ள குளங்கள் சிலவற்றிற்கு அண்மையில் உள்ள அரச காணிகளை மோசடி செய்த சம்பவங்களுடன் இவர் தொடர்பில் இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளை அடுத்தே இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளது. இவரது இடத்திற்கு பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக முல்லைத்தீவு பிராந்தியத்தியத்திற்கு பொறுப்பாக இருந்த எந்திரி. சிவபாதசுந்தரம் விஹிர்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Home புதினங்களின் சங்கமம் காணி மோசடி!! வடக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர் எந்திரி. ராஜகோபு பதவியிறக்கப்பட்டார்!!





