யாழில் திடீர் பணக்காரர்கள் மற்றும் சொத்து குவித்தவர்கள் தொடர்பில் சுமார் 18 பேர் போலீஸ் விசாரணை வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிசார் தெரிவித்தனர்.
அதாவது குறுகிய காலத்தில் அதிக சொத்துக்களை போதைப் கடத்தல்கள் , மீட்டர் வட்டி , கப்பம் போன்றவற்றின் மூலம் திடீர் பணக்காரர்கள் ஆகிய சுமார் 18 பேர் பொலிஸ் விசாரணை வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டனர்.
இவர்களில் சிலரை நீதிமன்றம் மூலம் அவர்களின் சொத்து விபரங்களை குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் சமர்ப்பிக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமது சொத்து விபரங்களை உரிய முறையில் சமர்ப்பிக்காத அவர்களின் சொத்துக்கள் விரைவில் நீதிமன்றம் முலம் பறிமுதல் செய்யப்பட உள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.





