பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த 16 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹொரணை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 16 வயதுடைய மாணவன், கடந்த 25ஆம் திகதி காலை சாதாரண தரப் பரீட்சைக்கான கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
எனினும், அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடியதுடன், காவல்துறையிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
மறுநாள் காலை மொரட்டுவ கடற்கரையில் மாணவனின் சடலம் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவரது தந்தை சடலத்தை அடையாளம் கண்டுள்ளார்.
மாணவனின் மரணம் தொடர்பாகச் சில சந்தேகங்கள் இருப்பதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமது மகனுக்கு என்ன நடந்தது? அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன? என்பவை தொடர்பான உண்மைகள் வெளிவர வேண்டும் எனக் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மொரட்டுவ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.





