Home புதினங்களின் சங்கமம் அவதானம் பெற்றோரே!! யாழில் அப்பாவின் நண்பனுடன் 18 வயது மாணவி தலைமறைவு!!

அவதானம் பெற்றோரே!! யாழில் அப்பாவின் நண்பனுடன் 18 வயது மாணவி தலைமறைவு!!

யாழில் தனியார் போக்குவரத்து சேவை நடாத்தும் வர்த்தகர் ஒருவரின் 18 வயதான பிரபல பெண்கள் பாடசாலையில் கற்கும் மகள் வர்த்தகரின் 36 வயதான திருமணம் முடித்து 2 பிள்ளைகளின் தந்தையான நண்பனுடன் தலைமறைவாகியுள்ளார். இச் சம்பவத்தால் இரு குடும்பங்கள் மற்றும் உறவுகளுக்கிடையில் மோதல் நிலை உருவாகியுள்ளது.

மாணவியுடன் தலைமறைவாகியுள்ளவன் ஏற்கனவே இன்னொருவனின் மனைவியையே கூட்டி வந்து குடும்பம் நடாத்தி 2 குழந்தைகள் இருப்பதாகவும் அவனது மனைவிக்கு முதல் கணவன் மூலமும் குழந்தை ஒன்று உள்ளதாகவும் தெரியவருகின்றது

குறித்த நபரின்  நடத்தைகளை அவதானித்து பல தடவைகள் தனது கணவனுக்கு மனைவி எச்சரித்திருந்தார் என்பதுடன் அவன் மகளுடன் தொலைபேசியில் தொடர்புகளை மேற்கொண்டு வந்ததை மனைவி கண்டித்து அது தொடர்பாக கணவனிடம் கூறி குறித்த நபரின் நட்பை முறித்துக் கொள்ளுமாறு சூறியும் கணவன் அவ்வாறு செய்யவில்லை எனவும் தெரியவருகின்றது.

மாணவி காணாமல் போனது தொடர்பாக மாணவியின் தாய் மற்றும் தாயின் சகோதரர்கள் மாணவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் அதே வேளை மாணவியை கொண்டு சென்றவனின் மனைவி மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments