யாழில் நடந்த கலியாண வீட்டில் மணப் பெண்ணின் முன்னாள் காதலன் பெரும் ரகளை!!
யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் சற்று முன் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த மண்டபத்தில் நடந்த திருமண வைபவத்தின் போது தாலி கட்டும் நேரத்தில் உள்ளே புகுந்த காவாலி ஒருவன் மண்டபத்தில் மணமக்கள் அமர்ந்திருந்த மேடையில் ஏறி ஒப்பாரி வைத்து அழுது புலம்பியதாகத் தெரியவருகின்றது. நிறைவெறியில் வந்திருந்த குறித்த காவாலியை அங்கிருந்தவர்கள் துாக்கிச் சென்று மண்டபத்திற்கு வெளியே கிடத்திய போது அவனுக்கு ஆதரவாக வந்த சிலர் அங்கு குழப்பம் ஏற்படுத்த முற்பட்டதாகவும் இதனையடுத்து அவர்களும் அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்டு கவனிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த காவாலி மணமகளின் முன்னாள் காதவ் எனவும் தன்னை காதலித்து தன்னுடன் படுத்தெழும்பிய பின்னர் தன்னை கைவிட்டுவிட்டதாக காவாலி அங்கு கத்திக் குளறி ஆர்ப்பாட்டம செய்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இருப்பினும் ஏற்கனவே இவனது காதல் லீலை தொடர்பாக மணப்பெண்ணின் குடும்பத்தினர் மாப்பிளை வீட்டருக்கு தெரியப்படுத்தியிருந்ததால் திருமணம் சுமூகமாக நடைபெற்றுள்ளது. குறித்த காவாலி மணப்பெண் பாடசாலையில் கற்கும் காலத்தில் ஒரே வகுப்பில் கற்றவன் என்பதுடன் பாடசாலைக் கால நட்பை வைத்து இவ்வாறு செயற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

