புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனி்ல் இலங்கைத் தமிழனான இந்திரஜித் செய்த செயல்!! அபராதம் பெற்ற தமிழர்கள் மகிழ்ச்சியில்!!

லண்டனில் கடந்த சில மாதங்களாக தமிழர்கள் உட்பட பலர் முகம்கொடுத்து வந்த வாகன நிறுத்தக் கட்டணத் தலைவலிக்கும், அபராதச் சீட்டு பிரச்சினைகளுக்கும் சாதகமான முடிவு கிடைத்துள்ளது.

லண்டன் ஹாரோ தெற்குப் பகுதிகளில் வசிக்கும் மற்றும் அப்பகுதிக்குச் செல்லும் தமிழ் மக்கள் இந்த நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர். வார இறுதி நாட்களில் பொருட்கள் வாங்கவும் உறவினர்களைச் சந்திக்கவும் தெற்கு ஹாரோவிற்கு வரும் நமது தமிழ் மக்கள், திடீரென கடுமையானதாக்கப்பட்ட வாகனத் தரிப்பிட விதிகளாலும் தொடர்ந்து வழங்கப்பட்ட அபராதச் சீட்டுக்களாலும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடியதாக இருந்தது.

இந்தச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் ஹாரோ தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் குமாரசாமி இந்திரஜித் துணிச்சலாகக் குரல் கொடுத்துள்ளார். Facebook, TikTok போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இந்தப் பிரச்சினையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக ஹாரோ நகரசபைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டு, அதிகாரிகளுடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹாரோ நகரசபைத் தலைவர் பால் ஆஸ்போர்ன் (Paul Osborn), பொதுப் பாதுகாப்பு மற்றும் அமலாக்கப் பிரிவின் மூலோபாயத் தலைவர் எம்மா ஃபேசி (Emma Phasey) மற்றும் நகரசபை அதிகாரி சுதேஷ் பாசி ஆகியோர் தமிழ் சமூகப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

நமது மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் தனிப்பட்ட சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு ஹாரோ நகரசபை இதுவரை வழங்கப்பட்ட பல வாகன நிறுத்த அபராதச் சீட்டுக்களை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

தமிழ் மக்களின் குரலுக்குச் செவிமடுத்து உடனடியாகத் தீர்வு வழங்கிய ஹாரோ நகரசபைக்கும் அதன் அதிகாரிகளுக்கும் ஹாரோ தமிழ்ச் சங்கம் தனது நெஞ்சத் தார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தெற்கு ஹாரோவில் வாகன நிறுத்த அபராதச் சீட்டு பெற்று உங்களிடம் அதற்கான நியாயமான விதிவிலக்கான காரணங்கள் இருப்பதாகக் கருதினால், இது தொடர்பான மேலதிக உறுதிகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் தெற்கு ஹாரோ நகரசபை அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு வலியுறுத்துகிறது

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x