புதினங்களின் சங்கமம்

திருமலையில் 50 இலட்சத்திற்கு நடந்தது என்ன? பெண்ணின் சோகக்கதை ! வெளிவரும் பலரின் பாதிப்புகள் !

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்

திருகோணமலை பிரபல வங்கி ஒன்றில் பெண் ஒருவர் தனது வங்கியில் வைப்புச் செய்த சுமார் 51 இலட்சம் ரூபாய் பணம் ஒரே நாளில் மாயமான விடயம் தற்போது பேசும் பொருளாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

திருகோணமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாடு ஒன்றிற்கு செல்வதற்காக தெரிந்த முகவர் ஒருவரின் உதவியை நாடுகிறார். அவர் சில நாட்களாக அவரை ஏமாற்றி கொழும்பில் வசிக்கும் இன்னுமொருவரை அறிமுகப்படுத்துகின்றார். அவர் சிலகாலம் ஏமாற்றி சுவிஸ் நாட்டில் வசிப்பதாக ஒருவரை அறிமுகப்படுத்தி அவர் தன்னை நம்பிக்கையானவர்போல் நடித்து அவர்கள் மனதில் இடம்பிடிக்கிறார் அவர், தான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என தெரிவித்து ஏமாற்றிய இருவருவரையும் எச்சரிக்கை செய்து பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கையை பெற்று தொடர் நடவடிக்கையை மேற்கொள்கின்றார்.

குறித்த பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக சுவிஸ் நாட்டில் நாட்டில் வசிப்பதாக கூறிய நபர் வங்கியில் பணம் போட்டுக் காட்ட வேண்டும் என கூறுகின்றார். குறித்த பெண் தனக்கு ஏற்கனவே இருக்கும் கணக்கில் போட்டுக் காட்டுவதாக கூறுகின்றார். ஆனால் குறித்த நபர் ஒரு வங்கியின் பெயரைச் சொல்லி அந்த வங்கியில் கணக்கைத் திறந்து காசை போடுமாறு கூறுகின்றார். அவரின்மேல் உள்ள நம்பிக்கையில் அவர் சொன்ன வங்கியில் கணக்கை ஆரம்பித்து நகைகளை அடகு வைத்தும் கடன் வாங்கியும் 50 இலட்சத்திற்கு மேலான தொகையை 13.07.2026 மற்றும் 14.07.2026 ஆகிய திகதிகளில் வைப்பிலிடுகின்றார். இந்நிலையில் அவருடைய கணக்கிற்கு சுவிஸ் நபரும் 77000 ரூபாயை வைப்பிலிடுகிறார்.

14.07.2026 அன்று மாலை அழைப்பை ஏற்படுத்திய குறித்த சுவிஸ் நபர் வைப்பு செய்த விபரங்களை கேட்டறிந்து ஐ.எல்.இ.எஸ் பரீட்சைக்கு தயாராகுமாறும் அதற்கு பணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்து அவருடைய மின்னஞ்சல் முகவரியையும் அதன் கடவுச் சொல்லையும் கேட்டறிகின்றார். அதற்கு பணம் செலுத்தி அந்த பற்றுச் சீட்டையும் அனுப்பி வைத்து குறித்த பரீட்சைக்கு வவுனியாவில் இருந்து ஒருவர் உங்களுடன் வருவார் எனவும் அவருடனும் தொடர்பை ஏற்படுத்தி மூவரும் ஒன்றாக கலந்துரையாடுகின்றனர்.

பின்னர் அன்று மாலை 6.19 மணியளவில் 2499025.00 ரூபாவும், 6.21 மணியளவில் 2619000.00 ரூபாவும் அவருடைய கணக்கில் இருந்து வங்கி மீதியாக 60.30 சதம் மாத்திரம் இருப்பதாக வங்கியில் இருந்து குறும் செய்தி வர பதறியடித்துக் கொண்டு வங்கியின் APPற்குள் நுழைய முயற்சிக்கின்றார் ஆனால் அது அவர்களால் முடக்கப்பட்டுவிட்டதால் குறித்த வங்கியின் துரித இலக்கத்திற்கு அழைப்பை எடுத்து விடயத்தைக்கூற ஒரு வங்கியின் பெயரை குறிப்பிட்டு அதற்கு குறித்த பணம் மாற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கின்றார். இதன்போது வங்கி கணக்கு இலக்கத்தை கேட்டபோது அவர் அதனை வழங்கவில்லை. உடனடியாக அவர்களுடைய பகுதி பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிடுகின்றார். இது பெரிய தொகை என்பதால் SCIB க்கு சென்று முறையிடுமாறும் இப்போது இரவு என்பதால் காலை சென்று முறையிடுமாறும் தெரிவிக்கின்றனர்.

மறுநாள் காலை குறித்த வங்கிக்கு சென்ற பாதிக்கப்பட்ட அங்கு முகாமையாளரிடம் தனது கணக்கில் இருந்து தான் யாருக்கும் பணத்தை மாற்றவில்லை எனவும் அதனை நிறுத்தி வைக்குமாறும் மாற்றப்பட்டுள்ள கணக்கு விபரங்களையும் கேட்கின்றார். அவர்கள் வழங்க மறுக்கின்றனர். பல வாக்குவாதங்களுக்குப் பின்னர் வங்கியிலிருந்து சென்று SCIB இல் முறைப்பாடு செய்கின்றார். அவர்கள் மாற்றப்பட்டுள்ள கணக்கு தொடர்பான விபரங்களை கேட்க மீண்டும் வங்கியில் வந்து குறித்த விபரங்களை கேட்கின்றார் அவர்கள் மீண்டும் மறுக்கின்றனர்.

குறித்த விடயம் சமூக வலைத்தளம் ஊடாக என்னால் வெளிக் கொண்டு வரப்படுகின்றது. இதன் பின்னர் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன.
1.சுவிஸ் நபரின் தலைமையில் பாரிய குழு ஒன்று இயங்கி வருகின்றமை
2.சுவிஸ் நபரின் தலைமையில் திருகோணமலை பிரபல பாடசாலை அதிபரின் மகன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் நேரடியாகச் சென்று வங்கியில் வைத்து தொலைபேசி மூலமாக 82 இலட்சம் ரூபா மோசடி செய்தமை. (யாழ் நீதிமன்றில் வழக்கு செல்கிறது)
3.அதிபருடைய மகனான மோசடிக்காரன் வவுனியா, திருகோணமலையைச் சேர்ந்த பெண்களின் கணக்குகளுக்கு பணத்தை மாற்றியுள்ளமை.
4.அதிபரின் மகன் பல வங்கி உயர் அதிகாரிகளுடன் இறுக்கமான நட்பை கொண்டிருக்கின்றமை.
5.அதிபரின் மகன் யாழ்ப்பாண பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றமை.
6.அதிபரின் மகன் தலைமறைவாக வாழ்கின்றமையும் பல நூதன திருட்டுகளுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றமையும்.
7.மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் 30க்கும் மேற்பட்ட நபர்களிடம் மோசடி செய்து அப்பாவிப் பெண்களை திட்டமிட்டு சிக்க வைத்தமை.

போன்ற பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. எனவே இதுபோன்று யாரும் பாதிக்கப்பட்டு இருந்தால் தகவல் தாருங்கள்.

குறித்த கும்பலின் அடுத்த நூதன திருட்டு தொடர்பாக அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x