புதினங்களின் சங்கமம்

விமானத்தில் பறக்கும் கனவில் இருந்த பல்கலைக்கழக மாணவி பலியான சோகம்!! நடந்தது என்ன?

பாணந்துறை – ஹிரன பகுதியைச் சேர்ந்த, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்விகற்று வந்த, விமானப் பணிப்பெண்ணாக வரவேண்டும் என்ற பெரிய கனவோடு இருந்த 20 வயதுடைய, ஒடித்யா முதுமாலி விஜேசேகர என்ற யுவதி சுவாச கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இளம் அழகியான ஒடித்யா, சிறு வயதில் இருந்தே சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாகவும், எனினும் அவருடைய வாழ்க்கை இவ்வளவு வேகமாக நிறைவுக்கு வரும் என தாங்கள் நினைக்கவில்லை என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், கடந்த 21ஆம் திகதி ஏற்பட்ட மூச்சுத் திணறலுக்குப் பிறகு, மரணத்திடம் இருந்து தப்பிப் பிழைத்து வர அவருக்கு இயலாமல் போனதாகவும் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அவருடைய தந்தை விஜேசேகர ஒரு தொழிலதிபர் எனவும், 16 மற்றும் 13 வயதுகளையுடைய இரு சகோதரிகள் ஒடித்யாவுக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x