புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சில் கணவனை கைவிட்டு வவுனியா போதைப் பொருள் வியாபாரியிடம் சரணடைந்த கமலவேணி!! கணவன் குழந்தைகளுடன் நிர்க்கதி!!

தனது கணவன் மற்றும் 5 வயது, 2 வயதான இரு பெண் குழந்தைகள் ஆகியோரை பிரான்சில் கைவிட்டு விட்டு வவுனியாவைச் சேர்ந்த போதைப்பொருள் காவாலி ஒருவனிடம் சென்று வசித்து வருகின்றாள் வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சொந்த இடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட 36 வயதான கமலவேணி உசாநந்தன். ஜங்ரொங் எனும் ரிக்ரொக் ஐடி மூலம் ஏற்பட்ட நட்பு தற்போது தன்னிடமிருந்து மனைவியைப் பிரித்துள்ளதாக கணவன் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் மனைவியின் ரிக்ரொக் ஐடியில் வவுனியாப் பகுதியைச் சேர்ந்த ஒருவன் நீண்டகாலம் தொடர்பு கொண்டிருந்ததை அவதானித்த கணவன் அது தொடர்பாக மனைவியுடன் முரண்பட்டிருந்ததாக தெரியவருகின்றது. மனைவியின் வட்சப் இலக்கத்திற்கு தனது அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களையும் அவன் அனுப்பியுள்ளான். இது தொடர்பாக கணவன் உடனடியாக வவுனியாப் பொலிசாருக்கு வெளிநாட்டிலிருந்து தொடர்பு கொண்டு முறையிட்ட போது குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல்கள்களில் ஈடுபட்டு வருபவர் என்பதையும் சில தடவைகள் குறித்த கடத்தல் சம்பவத்திற்காக சிறைக்குள் இருந்தவர் என்பதையும் பொலிசார் உறுதிப்படுத்தியள்ளனர்.

இது தொடர்பக மனைவியிடம் கணவன் தெரிவித்து அவளை நல்வழிப்படுத்த முற்பட்ட போது கடந்த சில நாட்களுக்கு முன் மனைவி திடீரென காணாமல் போயுள்ளார். தனது இரு பிள்ளைகளையும் குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் விட்டு விட்டு கணவன் வேலைக்கு சென்ற பின் பிள்ளைகளை அழைத்துச் செல்ல மனைவி மாலையில் குறித்த பராமரிப்பு நிலையத்திற்கு செல்லாததால் கணவனைத் தொடர்பு கொண்டு பிள்ளைகள் அங்கு நிற்பதாக குறித்த பராமரிப்பு நிலையத்தில் இருந்து தகவல் சென்றுள்ளது. இதனைடுத்து மனைவிக்கு கைத் தொலைபேசியில் தொடர்பு ஏற்படுத்திய கணவன் தொலைபேசி நிறுத்தப்பட்டிருப்பதையும் வீட்டு தொலைபேசியில் பதில் வராததையும் அறிந்து உடனடியாக குழந்தைகளைக அழைத்துக் கொண்டு வீடு சென்றுள்ளார். அங்கு மனைவியைக் காணாததால் வீட்டில் இருந்த சிசிரிவி கமராக்களை பரிசோதித்த போது மனைவி இன்னொரு இளைஞனுடன் வீட்டிலிருந்து பெரிய சூட்கேசுகளுடன் காரில் செல்வதை கண்டுள்ளார். இதன் பின் பொலிசாரிடம் முறையிட்ட போது பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட போது மனைவி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறியுள்ளார்கள்.

இதன் பின்னர் கணவன் மேற்கொண்ட விசாரணைகளில் தனது மனைவி வவுனியாவில் குறித்த போதைப்பொருள் காவாலியுடன் ஐக்கியமாகியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் பொலிசாருக்கு கணவர் விரிவான வாக்குமூலம் ஒன்றைக் கொடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இனிவரும் காலம் கமலவேணி பிரான்ஸ் திரும்பிச் சென்றால் விமானநிலையத்தில் வைத்தே பிரான்ஸ் பொலிசாரால் அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார் என கணவன் தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x