Home புதினங்களின் சங்கமம் எல்ல நீர் வீழ்ச்சியை பார்க்கச்சென்ற சுற்றுலாப் பயணி தவறி விழுந்து பலி!

எல்ல நீர் வீழ்ச்சியை பார்க்கச்சென்ற சுற்றுலாப் பயணி தவறி விழுந்து பலி!

எல்ல போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து உள்ளார்.

இரண்டு யுவதிகள் குறித்த நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்றபோது தவறி கீழே விழுந்தமையினால் உயிரிழந்து உள்ளதாக எல்ல சுற்றுலாத்துறை போலீசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று மதியம் நிகழ்ந்துள்ளதோடு பிரதேச மக்களின் ஒத்துழைப்போடு உயிரிழந்த சடலத்தை பாரிய சிரமத்துக்கு மத்தியில் மீட்கப்பட்டு
1990 ஆம்பியுலன்ஸ் ஊடாக பதுளை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டது.

குறித்த பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணத்தினால் குறித்த நீர்வீழ்ச்சியை பார்வையிட செல்லும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அவதானத்துடன் செயல்படுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை எல்ல போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments