யாழ் வேம்படி பள்ளிக்கூடத்தில் கற்ற 50 வயது அன்ரிகளின் ஒன்று கூடலுக்கு 7500 ரூபா கட்டணமா?
வேம்படி உயர்தரத பாடசாலையில் கல்வி கற்ற 50 வயது அன்ரிகள் தங்களது பொன்விழா ஒன்றுகூடலுக்கான ரூ.7,500 கட்டணம் குறித்து பழைய மாணவிகள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது.
25.07.2026 நடைபெறவுள்ள வேம்படி மகளிர் பாடசாலையின் பொன்விழா பழைய மாணவியர் ஒன்றுகூடலுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.7,500 பங்கேற்புக் கட்டணமும், ரூ.25,000 கட்டிட நிதிப் பங்களிப்பும் தொடர்பாக பழைய மாணவிகள் மத்தியில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.
பழைய மாணவியர் ஒன்றுகூடல் என்பது முன்னாள் மாணவிகளை மீண்டும் ஒன்றிணைத்து, பழைய நினைவுகளைப் பகிர்ந்து, நட்புறவுகளை வலுப்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது. எனினும், அதிக கட்டணம் காரணமாக பொருளாதார வசதி குறைந்த பல பழைய மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்க முடியாத நிலை உருவாகலாம் என்ற கவலை வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து பழைய மாணவிகளும் ஒரே பொருளாதார நிலையில் இல்லாத நிலையில், குடும்பப் பொறுப்புகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளால் பலர் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, புலம்பெயர் நாடுகளில் வாழும் பொருளாதார வசதி பெற்ற பழைய மாணவிகள் தங்களால் இயன்ற அளவில் கூடுதல் நிதிப் பங்களிப்பை வழங்கி, தாயகத்தில் வாழும் தோழிகளின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் ஆதரவளிக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.
பொன்விழாவின் வெற்றி வசூலிக்கப்படும் தொகையில் அல்ல; அனைத்து பழைய மாணவிகளையும் சமமாக இணைத்துக்கொள்ளும் மனப்பான்மையில்தான் உள்ளது என பலர் வலியுறுத்தியுள்ளனர். பொருளாதாரக் காரணங்களால் யாரும் ஒதுக்கப்படாமல், அனைவருக்கும் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே பழைய மாணவிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

