புதினங்களின் சங்கமம்

யாழ் கீரிமலை தீர்த்தம், நகுலேஸ்வரர் ஆலயம் போன்றவற்றுக்கு அருகில் கனடா அண்ணாவின் இறைச்சிக் கொத்துக் கடை!! பிரதேசசபைக்கு நல்ல வருமானமா?

மூத்த ஊடகவியலாளர் ஒருவரின் சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
இந்தப்படத்தில் காணப்படுவது கீரிமலை தீர்த்தக்கரையிலுள்ள சுவாமிகள் இளைப்பாறு மண்டபம். ஆடி அமாவாசை,சிவராத்திரி, மாசி மகம் போன்ற தினங்களில் நகுலேஸ்வரர், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் சுவாமிகள் தீர்த்தமாடிய பின் இளைப்பாறுவதற்கென ரணசிங்க பிரேமதாச பிரதமராக இருந்த போது 5 இலட்சம் ரூபா நிதியில் கட்டிய மண்டபம். இந்த மணடபத்திற்கு தண்டிகை கனகநாயக முதலியார் என்பவரின் வாரிசுகள் உரிமை கோருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க இந்த மண்டபத்தை பிரதமர் பிரேமதாசவே நேரடியாக வந்து திறந்து வைத்தார். திறப்பு விழாவில் உரையாற்றிய பிரேமதாச கீரிமலையை புனித நகராக பிரகடனப்படுத்தப்போவதாக தனது உரையில் தெரிவித்திருந்தார். வீரகேசரி,தினகரன் பத்திரிகைகளில் .பிரேமதாசாவின் உரைவெளி வந்த செய்திகள் இங்கு தரப்பட்டுள்ளன.
சிங்கள பௌத்த இனவாதியான பிரேமதாச எவ்வாறு தமிழ் ஈழத்திலுள்ள ஒரு பிரதேசத்தை அதுவும் தமிழரசுக்கட்சியின் கோட்டையில் புனிதப்பிரதேசமாக் பிரகடனப்படுத்த முடியும்?
எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம்.தமிழரசுக்கட்சியின் ஆட்சியின் கீழுள்ள வலி வடக்கு பிரதேச சபை கீரிமலை மாவிட்டபுரம் வீதியில் (இரண்டு கோயில்களுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் கனடா மெஸ்ஸுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இங்கு கோழிக்கொத்து பரிமாறப்படுகிறது.
எதிர்காலத்தில் பசுக்கொத்தும் பரிமாறப்படலாம். இப்போது இறைச்சிக்காக கூடுதலாக பசு மாடுகளே வெட்டப்படுகின்றன என்பது அனைவருமறிந்த ஒன்று.
ஆடி அமாவாசைக்கு உங்கள் தந்தைக்கு பிதிர்கடன் செய்ய வரும் அடியார்கள் தீர்த்தமாடிய பின் கனடா மெஸ்ஸுக்கு விஜயம் செய்து உங்களது விரதத்தை நிறைவேற்றிக்கொள்ளுங்கள். உங்களது தந்தை சிலவேளை மாட்டிறைச்சி சாப்பிட்டிருக்க மாட்டார். நீங்கள் கனடா மெஸ்ஸில் உங்களது விரதத்தை முடித்துக்கொண்டால் உங்களது தந்தையின் ஆத்மா சிவனின் பாதங்களில் சரணடையும்.
May be an image of text that says 'கோழி கொத்து 700 முடனட கொந்து முட்னடகொந்து Fy 400'May be an image of studying and textMay be an image of text
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x