புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவிலிருந்து கனடா சென்ற விமலநாதன் நண்பியுடன் சந்தோசமாக இருந்த போது உள்ளே நுழைந்து தாக்குதல் நடாத்திய கணவன் கைது!!

பிருத்தானியா கோவென்றி (Coventry) பகுதியில் வசித்து வரும் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த தர்மரட்ணம் விமலநாதன் எனும் 40 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர், தனது பாடசாலைக் கால நண்பியைச் சந்திப்பதற்காக, யாழ் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 40 வயதான உசானந்தி ஜீவராஜன் எனும் கனடா ஆல்பர்ட்டா பகுதிதியில் எட்மண்டன் பிரதேசத்தில் வசித்து வந்த நண்பியிடம் சென்றுள்ளார்.

அங்கு வாழ்ந்து வந்த நண்பி அண்மையிலேயே கணவரை விட்டு பிரிந்து தனியே வசித்து வந்துள்ளார். கணவர் தன்மேல் மேற்கொள்ளும் தாக்குதல்கள் காரணமாக அவர் தனது இரு பிள்ளைகளுடனும் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவ்வாறான நேரத்திலேயே விமலநாதன் அங்கு சென்றுள்ளார். அங்கு உசானந்தியுடன் விமலநாதன் தங்கியிருப்பதாக தனது பிள்ளைகள் மூலம் அறிந்த கணவன் உசானந்தியின் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து மனைவி மற்றும் நண்பன் மீது கொடூரத் தாக்குதல்களை மேற்கொண்டதுடன் விமலநாதனின் கால்களை அடித்து முறித்து அவனை கட்டிலுடன் கட்டி வைத்திருந்ததாகத் தெரியவருகின்றது. கணவனின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத மனைவி தப்பி ஓடி அருகில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்து பொலிசாருக்கு முறையிட்டுள்ளார். உடனடியாக அங்கு வந்த பொலிசார் கணவனைக் கைது செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. தற்போது பிணையில் வர முடியாத நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கணவன் அதன் பின்னர் இலங்கை்கு நாடு கடத்தப்படாலம் என அவரது சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றார்கள். இலங்கையின் புகழ்பூத்த பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் கற்கைகளை மேற்கொண்டு கனடா சென்று அங்கும் நல்ல சம்பளத்தில் பொறியியலாளராக கடமையாற்றி வந்த தனது மகன் மனைவியின் தகாத நடத்தை காரணமாக சிறை வாழ்க்கையில் இருப்பதாக கனடாவில் வாழ்ந்து வரும் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளார்கள்.

ஏற்கனவே உசானந்தி கனடாவில் தவறான நடத்தைகளுடன் செயற்பட்டதாலேயே மகன் அவளை கண்டித்து வந்ததாக பெற்றோர் தெரிவிக்கின்றார்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x