யாழ் வைத்தியசாலை ஒன்றில் நள்ளிரவு நடந்த கேவலம் இது!! (Video)
காரைநகர் பிரதேச வைத்தியசாலை-
தவறுகள் திருத்தப்பட வேண்டியவை
நியாயப்படுத்த வேண்டியவை அல்ல
காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவு வேளை வைத்தியரோ தாதியரோ கடமையில் இருக்கவில்லை எனவும் இதனால் நோயாளி ஒருவரைக் கொண்டு சென்றவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர் எனவும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தக் காணொளிக்கு வைத்தியசாலை நிர்வாகம் விரைவாக உரிய பதில் வழங்கவேண்டும்.
குறித்த வைத்தியசாலையில் நடைபெறும் ஒழுங்கீனங்கள் தொடர்பாக நானும் கடந்த மாதம் முகப்புத்தகத்தில் ஒரு பதிவேற்றம் செய்திருந்தேன்.
அதன் பின்னர், எமது ஊரில் இருந்து வைத்தியசாலைக்குச் செல்பவர்களை அங்கு கடமையில் இருக்கும் வைத்தியர் ”எவ்வளவு நேரம் வெளியே நின்றீர்கள். இதையும் பேஸ்புக்கில் போடுவீர்களோ..?” எனக் கேள்விக்கு மேல் கேள்வி எழுப்புகின்றாராம்.
பிரச்சினை என்றால் தம்மோடு பேச முடியும் எனவும் முகப்புத்தகத்தில் தரவேற்றியது தவறு எனவும் கூறுகின்றார் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனது பதிவில் ஏதும் தவறு இருப்பின் எனது இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி விளக்கம் கோர முடியும். அதை விடுத்து ஏதுமறியாத நோயாளர்களிடம் ஏன் தேவையற்ற பேச்சுக்கொடுக்கின்றீர்கள்?
ஐயா…,தவறுகள் திருத்தப்பட வேண்டியவை. நியாயப்படுத்த வேண்டியவை அல்ல.

