அநுராதபுரம் திருப்பனை பிரதேசத்தில் 65 வயது தாயை கொடூரமாக கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய இளைய மகளும், அவரின் காதலன் எனக்கூறப்படும் 25 வயதுடைய இளைஞனும் அனுராதபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். உயிரிழந்த தாய் சுமார் 24 வருடங்களாக வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்துள்ளார்.
நடத்தப்பட்ட விசாரணைகளில், உயிரிழந்த தாயிடம் இருந்த 10 லட்சம் ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை கொலைக்கு முன்னர் திருடியுள்ளதாகவும், இவ்வாறு பணம் மற்றும் நகைகளைப் பெற்றுக்கொண்டு வெளிநாடு செல்லும் நோக்கிலேயே இந்தக் கொலையைச் செய்ததாகவும் அந்த மகள் மற்றும் காதலன் ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Home புதினங்களின் சங்கமம் யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் தயாளினி கொல்லப்பட்டது போல் அனுராதபுரத்திலும் நடந்த சம்பவம்!!





