புதினங்களின் சங்கமம்

யாழில் நீரில் மூழ்கி சிறுவன் பலி!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளான்.

சிறு வயதில் தந்தையை இழந்த குறித்த சிறுவன் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த திலீபன் சந்தோஷ் (வயது- 13) என்ற சிறுவன் நீரில் ழூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறையிலுள்ள ரேவடி நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்டிருந்த வேளையே , எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.