யாழ் சுன்னாகத்தில் உள்ள பிரபல புடவை கடையில் இடம்பெறும் மோசடி!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்..
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள புடவைக் கடையில் பிரதேச செயலகம் ஒன்றில் பணியாற்றும் பெண்ணொருவர் அலுவலகத்திற்கு அணியக்கூடிய சேலை ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். அதற்கான கட்டணத்தை இலங்கையின் அரச வங்கி ஒன்றினால் வழங்கப்பட்ட கடனட்டை மூலம் செலுத்தியுள்ளார்.
இது நடந்து சில வாரங்களின் பின்னர் Apple App Store, Amazon Prime ஆகிய தளங்களில் இருந்து $0 வெட்டப்பட்ட குறுஞ்செய்தி வந்துள்ளது. $0 எப்பதால் குறித்த அரச ஊழியர் அதை பெரிதுபடுத்தவில்லை. அதன் பின்னர், இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் $15 ஆனது Apple App Store இல் வெட்டப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதன் பின்னர் பதற்றமடைந்த அவர், Card Center க்கு அழைப்பெடுத்து முறையிட்டுள்ளார். பெரும்பாலான online payments இன் போது OTP கேட்கப்படும் நிலையில் குறித்த கட்டண பரிமாற்றத்திற்கு ஏன் OTP கேட்கவில்லை என கேட்ட போது சலப்பலாக பதில் வந்துள்ளது.
அதன் பின்னர் அவர் வங்கியில் மேற்கொண்ட முறைப்பாடு அடிப்படையில் பணம் மீள கிடைத்துள்ளது.
குறித்த ஊழியரால், கடந்த ஒருவருடத்தில் ஊழியரிந் கையில் Card ஐ கொடுத்து மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவு இது மட்டுமே என்ற வகையில், அவர் முழுமையாக குறித்த கடையை சந்தேகப்படுகிறார்.
அவரினால் எமக்கு அனுப்பப்பட்ட செய்தியில், இப்படிப்பட்ட சம்பவத்தால் வேறு யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அதாவது சுண்ணாகப் பகுதியில் ஆடை வாங்கி கார்ட் மூலம் கொடுப்பனவு செலுத்தி அதன் பின்னர் இவ்வாறான அனாமதேய கட்டணங்கள் வெட்டப்பட்டிருந்தால் தனக்கு தெரியப்படுத்தவும், அவ்வாறு தெரியப் படுத்தினால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் எமது inbox இல் தொடர்பு கொள்ளவும்.

