இதென்னடா 2000 ரூபா தாளுக்கு வந்த சோதனை! செல்லுமா? செல்லாதா?
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்…
நாட்டில் ஒரு நாணத்தாளை வெளியிட்டு விட்டு, அது செல்லுபடியாகாது என்று சொல்வது – எவ்வளவு பெரிய அபத்தம்.
நாட்டில் புதிதாக 2000 ரூபாய் பெறுமதியான நாணயத்தாள் ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டது.
சில நாணயத்தாள்களைப் பார்த்தால் அப்படியே கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருக்கும். ஆனால், இந்த நாணயத்தாள் ஏதோ ‘முழிப்பு’ இல்லாதது போல்தான் எப்போதும் தெரிகிறது.
இரண்டொரு தடவைதான் இது – என் கைக்கு வந்து போயிருக்கிறது. போகிற போக்கில் பார்ப்பதற்கு 50 ரூபாய் தாள் போலவும் தெரியும்.
இன்று அமானா வங்கிக் கிளையொன்றில் ஒரு தொகை வைப்புச் செய்ய வேண்டியிருந்தது. தானியங்கி இயந்திரத்தில் வைப்புச் செய்யும் வசதிதான் அங்கு இருந்தது. பேர்ஸ்-இல் இருந்து காசை எடுத்தேன் – அதில் புதிய 2000 ரூபாய் தாளும் இருந்தது.
உடனே அங்கிருந்த செகுரிட்டி தம்பி வந்து, ”புது 2000 ஆயிரம் ரூபாய் தாளை மெசின் எடுக்காது” என்றார். அப்படியே வங்கிக்குள்ளே சென்று கேட்டால், இலங்கையில் எந்த வங்கியினுடைய தானியங்கி இயந்திரத்திலும் – புதிய 2000 ரூபாய் தாள் செல்லுபடியாகாதாம் என்றார் அங்கிருந்த உத்தியோகத்தர்.
பிறகு, அந்த 2000 ரூபாயை கொடுத்து 1000 ரூபாய் தாள்கள் இரண்டை வாங்கிக் கொண்டு வந்து – வைப்புச் செய்தேன்.
ஒரு நாட்டின் பணம், அந்த நாட்டிலுள்ள வங்கிகளில் செல்லுயாகாமல் இருப்பது – என்ன வகையான டிசைன் என்று தெரியவில்லை.
அப்புறம், அந்த 2000 ரூபாய் தாளுக்கு இது எவ்வளவு பெரிய அவமானம்.

