புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணம் புத்தூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு எதிரே அமைந்துள்ள புத்தூர் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையின் பின்புறத்தில் உள்ள குளம் அருகே இச்சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இறந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அடையாளம் காண்பதற்கு பகிர்ந்து விடுங்கள்

May be an image of grass