புதினங்களின் சங்கமம்

யாழ் வடமராட்சியில் சுகாதாரத்துறையின் பாய்ச்சல்!! அழுகிய மரக்கறி, இறைச்சியில் சமையல்!! அதிர்ச்சிக் காட்சிகள் (Video)

கரவெட்டிப் பிரதேசத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதர்களால்
முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 6 உணவகங்கள் மீது
சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் 5 உணவகங்களில் பரிமாறுவதற்கு தகுதியற்ற
உணவுகள் அழிக்கப்பட்டன.

இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் பணிப்புரைக்கமைவாக பொதுமக்களின்
முறைப்பாட்டினை அடுத்து வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி
பணிமனைக்குட்பட்ட 13 உணவகங்கள் மற்றும் 4 மருந்தகங்கள் மீது நேற்று (24)
திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கை வல்லை, புறாப்பொறுக்கி, குஞ்சர்கடை,
நாவலர்மடம், நெல்லியடி போன்ற பகுதிகளில் இடம்பெற்றது. இந்த கண்காணிப்பு
நடவடிக்கை ஒரு உணவு மருந்துப் பரிசோதகர் மற்றும் மூன்று பொது சுகாதார
பரிசோதகர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.p>இதன்போது பல உணவகங்கள் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்டதுடன் அதிகமான
உணவகங்களில் நீண்டநேரம் சூடான நிலையில் வைத்திருப்பதற்காக றெஜிபோம்
பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த றொட்டி வகைகள் கைப்பற்றப்பட்டன.

மேலும் உணவு தயாரிக்கும் இடத்திற்கு மிக அருகாமையில் மயிர்க்கொட்டி,
குளவிக்கூடு மற்றும் சிலந்தி வலை என்பன காணப்பட்டதுடன் சமைத்த, சமைக்காத
உணவுகள் குளிர்சாதனப் பெட்டியில் ஒன்றாக சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
சில உணவகங்களில் மூடியற்ற நிலையில் குப்பைத் தொட்டிகள்
வைக்கப்பட்டிருந்ததுடன் சமைத்த உணவுகள் மூடப்படாத நிலையிலும் வெளிச்சமற்று
காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

No photo description available.Image may contain: foodNo photo description available.Image may contain: foodImage may contain: foodImage may contain: foodImage may contain: food