புதினங்களின் சங்கமம்

யாழில் சிறுவர்களைக் கூட விட்டு வைக்காத குடும்பப் பெண்!! இளைஞர்களையும் வலையில் வீழ்த்தியுள்ளார்!

“வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மணற்குடியிருப்பைச் சேர்ந்த மூத்தக்கா எனப்படும் பாபு பூபதி, கடந்த 13 வருடங்களாக சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இவர் கசிப்பு வாங்க வருவோரிடம் பணம் தராதவர்களை மிரட்டி, அவர்கள் அணிந்திருக்கும் நகைகளைப் பிடுங்கிக் கொள்வதுடன், தனது செயல்களைத் தடுக்க நடவடிக்கை எடுப்பவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை அவதூறாகப் பேசும் செயல்களிலும் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் தனது கசிப்பு வலையில் வீழ்த்தி வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுக்கின்றார்கள்.

மேலும், இவ்விடயம் குறித்து மக்கள் கிராம சேவகர் அலுவலகத்தில் முறைப்பாடு அளித்து விசாரணைக்கு வந்தபோது, பாபு பூபதி தலைமறைவாகியுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமன்றி, மருதங்கேணி பொலிஸார் லஞ்சம் பெற்றுக்கொண்டு இவ்விடயத்திற்கு உடந்தையாகச் செயல்பட்டு வருவதாகவும், மற்றும் இதனால் அப்பகுதியில் உள்ள பல குடும்பங்கள், இளைஞர்கள் சீரழிவதாகவும் அப்பகுதி மக்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இவர் முகநூல் அல்லது செய்திகளில் தனது செயல்களைப் பற்றி பதிவு வந்தாலும் கசிப்பு விற்பனையை நிறுத்த மாட்டேன் என வீராப்பாகப் பேசி வருவதாகவும் தெரியவருகிறது. ஆகவே பொலிசார் மூத்தக்காவுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.