புதினங்களின் சங்கமம்

யாழில் சிறைக்குள் இருந்தவாறே அச்சுறுத்தி மீற்றர் வட்டி கறக்கும் விது!

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்

சிறையில் இருந்தாலும் வட்டி வசூல் நடத்தும் இளவாலை மீட்டர் வட்டி விது.அண்மையில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் சந்தேக நபராக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளவாலை மீட்டர் வட்டி விது சிறையில் இருந்தும் தனது வட்டி வசூலிப்பை கையாட்கள் மூலம் செய்து வருகிறார்.

வட்டி செலுத்த வேண்டியவர்களின் வீடுகளுக்கு ரவுடிகளை அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதாக அறிய முடிகிறது. வட்டிக்கு பணம் பெற்றவர்கள் யாரிடம் பணம் வழங்குவது என்ற திண்டாட்டத்தில் இருப்பதாகவும் அறிய முடிகிறது. விதுவின் மனைவி விதுவை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவரும் இளவாலை, கீரிமலை பகுதிகளில் வட்டி வசூலிப்பில் ஈடுபட்டுள்ளார்.ரவுடிகளை வீடுகளுக்கு அனுப்பி மிரட்டி வருகிறார். சிறைக்குள் இருந்து கொண்டே மீட்டர் வட்டி தொழிலிலும் மிரட்டலிலும் ஈடுபடும் விது வெளியே வந்து என்ன செய்ய போகிறாரோ தெரியவில்லை.

தன்னிடம் வாங்கிய பணத்தையும் வட்டியையும் தன்னிடம் தானே கொடுக்க வேண்டும் என்று வந்தால் என்ன செய்வது. யாரிடம் பணம் வழங்குவது. வட்டி விதுவுக்கு பயப்படுவதா ரௌடிகளுக்கு பயப்படுவதா என்று பணம் பெற்றவர்கள் குழம்பி உள்ளார்கள். முன்னர் பிரிந்து வாழ்ந்த மனைவியும் ரவுடிகளுடன் தொடர்புகளை பேணி மிரட்டி வருகிறார்.போலீசாருக்கு இது தெரிந்திருந்தும் அவர்களும் பணத்தை பெற்று கண்டும் காணாமலும் இருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.இதனால் போலீஸ் நிலையம் சென்று முறைப்பாடு போடவும் அஞ்சி நிற்கின்றனர்.

காங்கேசன்துறை போலீஸ் பிரிவில் முறைப்பாடு போடும் பொதுமக்களின் பக்கம் போலீஸ்காரர் நிற்பதில்லை எனவும் மீட்டர் வட்டிக்கு கொடுப்பவர் பக்கமே காவல் துறையினர் நிற்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். விது குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பாக காவல்துறையினர் விசாரிக்வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அக்குழுவினருக்கு பணம் வழங்குபவர்கள் போலீஸ் நிலையம் சென்று அங்கு பதிவு செய்து வழங்கினால் பணம் வழங்கியமை தொடர்பான அத்தாட்சி இருக்கும். இல்லாவிடில் நீங்கள் பணம் வழங்கவில்லை என்றே கருதப்படும்.எனவே அவர்களால் மிரட்டப்பட்டு பணம் வழங்குபவர்கள் இது தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும்.மீட்டர் வட்டியை ஒழிப்போம் என்று அரசாங்க உறுப்பினர்கள் அறிக்கை விட்டும் இன்னும் கொடூரங்கள் நடக்கிறது.

இது தொடர்பாக NPP அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது?

தொடர்ந்தும் வடக்கு மக்களை ஏமாற்றுமா?