பிருத்தானியாவில் ”நீ ஒரு ஆம்பளையா என கேட்டு” வைத்தியரான கணவன் மீது தாக்குதல் நடாத்திய யாழைச் சேர்ந்த தர்சிகா கைது!!
பிருத்தானியாவின் சவுதாம்ப்டன் (Southampton) பகுதியில் 41 வயதான வைத்தியர் ஒருவரைத் தாக்கிய குற்றத்திற்காக 36 வயதான தமிழ் குடும்பப் பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த டினேஸ்கரன் தர்சிகா என்பவரே கைது செய்யப்பட்டவராவார். தர்சிகாவின் கணவனான டினேஸ்கரன் மீது தர்சிகா இரும்பு குழாய் மூலம் தாக்குதல் மேற்கொண்டு தலை மற்றும் முகப்பகுதியில் கடும் காயங்களை உண்டாக்கியுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டினேஸ்கரன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தர்சிகா கைது செய்ப்பட்டதாகத் தெரியவருகின்றது. குறித்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கணக்காளராக கடமையாற்றும் தர்சிகா தனது கணவனின் கிறடிட் காட் மூலம் பாரிய தொகை ஒன்றினை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது உறவுகளுக்கு அனுப்பியதின் பின்னர் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக டினேஸ்கரனின் உறவுகள் தெரிவித்துள்ளார்கள். டினேஸ்கரன் கொழும்பைச் சொந்த இடமாகக் கொண்டவர் எனத் தெரியவருகின்றது.
தர்சிகாவைக் கைது செய்ய சென்ற பொலிசாருக்க தர்சிகா கொடுத்த வாக்குமூலத்தில் ”டினேஸ்கரன் தன் மீது பாலியல் வல்லுறவு புரிய முற்பட்டதாகவும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போது தன்னை கொலை செய்ய முற்பட்டதாகவும் அதனாலேயே தற்பாதுகாப்புக்கு தாக்கியதாகவும் கூறியிருந்தார். இருப்பினும் டினேஸ்கரனின் மகள் கொடுத்த வாக்குமூலத்தில் இருந்த உண்மைத்தன்மையைக் கருத்தில் எடுத்து தர்சிகா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. ”நீ ஒரு ஆம்பிளையா என கேட்டு அப்பாவை அம்மா அடித்ததாக கூறியதாக மகள் கொடுத்த வாக்குமூலத்தில் தெரியவருகின்றது.

