கற்பிட்டியில் ரிக்ரொக் காதலனுடன் ஓடிய இளம் தாயைத் தேடும் சிறு குழந்தைகள்!!
புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள வன்னிமுந்தல் பகுதியில் வசித்து வந்த 30 வயதான இளம் பெண் ஹூஷைன் சஹாப்டீன் பாத்திமா சஜீரா.
கடந்த 15ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மூன்று பெண் குழந்தைகளின் தாயாகவும், நாசீர் என்பவரின் மனைவியாகவும் வாழ்ந்து வந்த சஜீரா, குடும்ப வாழ்க்கையில் அமைதியாக இருந்த ஒருவர் என அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். 11, 9 மற்றும் 2 வயதுடைய மூன்று பெண் குழந்தைகள் இந்த தாயின் பிரிவால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.
தாயை எதிர்பார்த்து தினமும் கதவு நோக்கி பார்ப்பது அந்தக் குழந்தைகளின் தினசரி வேதனையாக மாறியுள்ளது. குடும்பத்தினரின் தகவலின்படி, சஜீரா சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக TikTok வழியாக அறிமுகமான ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அந்த நபர் வைத்தியர் ஒருவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், சுமார் 20 இலட்சம் ரூபாய் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, லுகன் என அழைக்கப்படும் ஒருவர் சாரா என்ற போலி கணக்கின் (fake ID) மூலம் சஜீராவை மிரட்டியதாகவும், அதனால் மனஅழுத்தத்தில் இருந்த அவர் சில நண்பர்களின் உதவியை நாடியதாகவும் குடும்பத் தேடலின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தகவல்கள் சம்பவத்தை மேலும் சிக்கலாக்குகின்றன். சஜீராவின் திடீர் காணாமல் போனமை குறித்து குடும்பத்தினர் உடனடியாக பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர்.
தற்போது பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். தொலைபேசி பதிவுகள், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் சமூக வலைத்தள தொடர்புகள் ஆகியவை ஆராயப்பட்டு வருகின்றன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு தாயின் இழப்பு என்பது பெண் குழந்தைகளின் வாழ்க்கையில் நிரப்ப முடியாத வெற்றிடமாகும். குறிப்பாக 2 வயது குழந்தைக்கு தாயின் அரவணைப்பு இன்றியமையாத ஒன்று. குடும்பத்தினர் தினமும் பிரார்த்தனையுடன் அவர் பாதுகாப்பாக திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், குறித்த சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்கலாம். அல்லது 0706441411, 0787052689, 074 160 5268 என்ற இலக்கித்திற்கு அறிவித்து தயவுசெய்து உதவுமாறு குடும்பத்தினர் பணிவுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக வலைதளங்களின் தவறான பயன்படுத்தல் எவ்வாறு குடும்பங்களை சிதைக்கக்கூடும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாகவும் படிப்பினையாகவும் பார்க்கப்படுகிறது.
மூன்று சிறுமிகளின் கண்களில் தெரியும் எதிர்பார்ப்பு, கணவரின் அமைதியான வேதனை, பெற்றோரின் மனமுடைந்த நிலை இவை அனைத்தும் சஜீராவின் காணாமையின் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன.
மனிதாபிமான அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சஜீரா எங்கு இருந்தாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே குடும்பத்தின் ஒரே பிரார்த்தனை.
அவள் விரைவில் வீடு திரும்பி, தனது குழந்தைகளைத் தழுவும் நாள் விரைவில் வர வேண்டும் என்பதே அனைவரின் இதயப்பூர்வமான வேண்டுகோளாகவும் உள்ளது.
முடியுமானவரைக்கும் பகிர்ந்து அவர்தொடர்பான தகவல்கள் கிடைக்க தயவுசெய்து உதவுமாறு வேண்டப்படுகின்றது!

