புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் செந்தில்நாதன் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு – வட்டுவாகால் பாலத்திற்கு அருகில் இரவு நேர வீச்சுவலை மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட நபர் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் 25.02.2026 அன்று இரவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் வீச்சுவலை தொழில் நடவடிக்கைக்காக சென்ற 45 அகவையுடைய வேலு செந்தில்நாதன் என்ற குடும்பஸ்தர் வீடு திரும்பாத நிலையில் மனைவி முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் இன்று (26) காலை முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த வட்டுவாகல் பகுதியில் ஏனைய மீனவர்கள் தேடுதல் நடத்தியபோது குறித்த நபர் சுரியில் அகப்பட்டு நீரில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.