வவுனியா பண்டாரிகுளப்பகுதியில் கடை உரிமையாளரை துரத்தித் துரத்தி கத்தியால் குத்திய பெண் கைது! நடந்தது என்ன? பரபரப்ப வீடியோ
வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்துடன் தொடர்பில் கூமாங்குளம்பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இன்று மதியம் பண்டாரிகுளம் முனியப்பர்கோயில் வீதியில் உள்ள அடுக்குமாடி வளவுக்குள் அமைந்துள்ள கடையில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
கத்தி வெட்டுச்சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் , வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கமைய, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.எஸ்.வீரத்தின அவர்களின் வழிகாட்டலில், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி இலங்கசிங்க தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான 37348 திஸாநாயக்க (37348), ரேவத (40878) பொலிஸ் கொன்8098)ஸ்தாபிள்களான , நவகீதன் போச.உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு துரிதமாகச் செயல்பட்ட பொலிசார் சம்பவத்துடன் தொடர்பான பெண்ணை உடனடியாக கைது செய்தனர்
இதன்போது கூமாங்குளம். பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு, அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக துப்பரவு வேலை செய்து வந்ததாகவும் அங்கு வாடகையடிப்படையில் தங்கியிருந்த குறித்த 64 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அங்கு துப்பரவு பணி வேலை செய்துவரும் சந்தேகநபருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக சந்தேக நபரை அடுக்குமாடிக் குடியிருப்பின் உரிமையாளர் வேலையில் இருந்து நிறுத்தியதாகவும் இவ் முரண்பாடு காரணமாகவே இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

