கனடாவில் தங்கம் வாங்கச் சென்ற புலம்பெயர் தமிழனுக்கு நடந்த அதிர்ச்சி!! அவதானம் தமிழர்களே!!
“புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்வில் தங்கம் என்பது ஒரு அங்கமாக மாறியுள்ளது. பல நாடுகளில் நகைச்சீட்டு மூலம் நகைகளுக்காக தங்க நகைகளை அதிகளவிலான தமிழர்கள் பெற்றுள்ளனர். இவ்வாறான நிலையில் தங்கத்தை விற்பனை செய்யும்போது தாம் ஏமாற்றமடைவதாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கனடாவின் டொரன்டோவில் வசிக்கும் நபர் ஒருவர் தனது நான்கு கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை விற்பனை செய்வதற்காக அங்குள்ள நகைக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது வெவ்வேறு கடைகளில் ஒரே நகை வெவ்வேறு எடைகள் காட்டப்பட்ட சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபர் மொத்தம் ஐந்து நகைக்கடைகளுக்கு சென்று தனது நகையை எடைபோட்டு பார்த்துள்ளார். அதில் நான்கு கடைகளில் உள்ள மின்னணு எடை இயந்திரங்கள் அவரது நகையின் சரியான எடையை காட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக நான்கு கடைகளில் நகையை அளவிடும் போது 3.9 கிராம், 3.8 கிராம் மற்றும் 3.85 கிராம் என நகையின் உண்மையான எடையை விட குறைவான அளவுகளே காட்டப்பட்டுள்ளன.
ஐந்து நகைக்கடைகளில் ஒரே ஒரு கடையில் மாத்திரம் நகையின் சரியான எடையான நான்கு கிராம் துல்லியமாக காட்டப்பட்டுள்ளது. தற்போது சந்தை நிலவரப்படி 0.1 கிராம் தங்கத்தின் மதிப்பு சுமார் 13.68 அமெரிக்க டாலர் அதாவது சுமார் 20 கனேடியன் டாலர்கள் ஆகும். ஒரு கடையில் 0.2 கிராம் எடை குறைவாக காட்டப்பட்டால் வாடிக்கையாளருக்கு தெரியாமலேயே சுமார் 40 கனேடியன் டாலர்கள் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
நகைக்கடைகளில் உள்ள எடை இயந்திரங்கள் முறையாக அங்கீகரிக்கப்பட்டு காலிப்ரேஷன் (Calibration) செய்யப்பட வேண்டியது அவசியம். சிறிய அளவிலான எடை குறைப்பு கூட அதிகப்படியான தங்கத்தை விற்கும் போது அல்லது வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தும்.
எனவே பொதுமக்கள் தங்கத்தை வாங்கும் போதோ அல்லது விற்கும் போதோ அளவிடும் இயந்திரத்தில் பூஜ்ஜியம் சரியாக உள்ளதா என்பதையும் எடை துல்லியமாக காட்டப்படுகிறதா என்பதையும் மிக கவனமாக அவதானிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.”

