முல்லைத்தீவு ஒட்டிசுட்டானில் அடிகாயங்களுடன் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
ஒட்டிசுட்டான் பகுதியில் வீதியோரம் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். கடந்த செவ்வாய் கிழமை (27) இரவு சடலம் வீதியோரத்தில் இருந்து, அவருடைய துவிச்சக்கரவண்டியுடன் காணப்பட்டுள்ளது.
தலையில் இருந்து இரத்தம் வழிந்த நிலையில் குற்றுயிராய் கிடந்த நபர், பொலிஸாரால் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.
இறந்தவர் பெரியகுளம் நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது இன்னும் தெரியவில்லை என பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

