சற்று முன் கல்லடிப் பாலத்திலிருந்து குதித்த 20 வயது விதுசாயினி சடலமாக மீட்பு! பரபரப்ப வீடியோ
கல்லடி பாலத்தில் பாய்ந்த யுவதி ஒருவர்சடலமாக மீட்கப்பட்டுள்ளார், தாளங்குடா சமூர்த்தி வங்கி வீதி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளங்கோ விதுசாயினி எனும் யுவதியே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதி பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிசாரினால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
விதுசாயினி கடந்த வருடம் உயர் தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரிய வருகின்றது.
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

