தர்சிகாவைக் கொன்றது கனடாவில் உள்ள தமிழ்க் காமுக கிழடுகளா?? ஹரிசாளினி திர்ச்சித் தகவல்!!
இங்குள்ள (கனடா) தமிழ் இளைஞர்களை இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ திருமணம் செய்து இங்கு வரும் தமிழ்ப் பெண்களின் கணவர்மார் குடிகாரர்களாகவோ அல்லது கோபக்காரர்களாகவோ அல்லது போதைப் பொருள் பாவிப்பவர்களாகவோ இருப்பதால் இங்குள்ள ஏனைய தமிழ்க் குடும்பஸ்தர்கள் தமிழ் வயோதிபர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கின்றது. அவர்களே அந்தக் குடும்பத்தை பிரித்து அநாதரவாக நிற்கும் அந்த பெண்களின் வாழ்கையில் விளையாட நினைக்கின்றார்கள்.
புதிய இடத்திற்கு வந்த பின்னர் கணவன் போதைப்பொருள் பாவனையாளன் அல்லது கடும் மன அழுத்தகாரனாக இருப்பதை அறிந்து தடுமாறும் பெண்களை இவ்வாறான கொடூர நரிகள் குதறியெடுக்க திரிகின்றன. முற்று முழுதாக பாலியல் நோக்கோடு அந்த பெண்களை அணுகி கணவனிடத்திலிருந்த அவளைப் பிரித்து தம்வசப்படுத்த இங்குள்ள வயோதிப கொடூரக் காமுகர்களும் கலியாணம் கட்டிய குடும்பஸ்தர்களும் முயற்சி செய்கின்றார்கள். குறிப்பாக சிறு நிறுவனங்களை அல்லது இங்கு கடைகளை வைத்து நடாத்தும் அல்லது ஊடகங்களை நடாத்தும் இவ்வாறான கேவலம் பிடித்தவர்களால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் வந்துள்ளன. மனைவிக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறி அவளை தங்கள் வசப்படுத்தி கணவரிடம் இருந்து பிரிக்க இவர்கள் நரித்தனமான செயற்பாடுகளை செய்கின்றார்கள்.
தனது கணவனை அன்பால் திருத்த முடியும் என்று எந்தப் பெண் உணருகின்றாளோ அவளால் கணவனும் நல் வழிக்கு வந்து குடும்பமும் சிறப்பாக அமையும். அல்லாது விடின் இருவர் வாழ்க்கையும் அலங்கோலமாகிவிடுவதுடன் குறித்த பெண்ணும் நடத்தை கெட்டவர்களுடன் சேர்ந்து சீரழிந்துவிடுகின்றாள்…..
நான் கனடா வந்த பின்னர் முற்று முழுதாக உணர்ந்துள்ள சம்பவங்கள் ஏராளம் உள்ளது. எவ்வாறாயினும் தர்சிகாவின் கொலை என்பது தனியே சசிகரன் என்பவனால் மட்டும் நடாத்தப்படவில்லை என்பது வெளிப்படையான உண்மை.


