புதினங்களின் சங்கமம்

யாழ் கொமர்ஷியல் வங்கியின் பிராந்திய காரியாலயத்தின் மூன்றாம் மாடியில் பெண் வாடிக்கையாளர்களுடன் ஓரினச் சேர்கையா? கணவரை வெளியே நிறுத்தி விட்டும் நடக்கிறதா? அதிர்ச்சி தகவல்கள்!

இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும்…. தலையங்கம் மாத்திரம் வம்பனுடையது…

ஆண்களுக்கு அனுமதியில்லை.

யாழ்ப்பாணத்தில் உள்ள கொமர்ஷியல் வங்கியின் பிராந்திய காரியாலயத்தின் மூன்றாம் மாடி பெண் வாடிக்கையாளர்களுக்கு என ஒதுக்கியுள்ளார்கள். அந்த தளத்தில் , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் முதல் கொண்டு அனைவரும் பெண்கள்.

அந்த தளத்தின் உள்ளே ஆண்கள் செல்ல முடியாது. மனைவியுடன் சென்ற கணவனோ , தாயுடன் சென்ற மகனோ, சகோதரர்களாக இருந்தாலோ எந்த உறவு முறையாக இருந்தாலும் ஆண் என்றால் உள்ளே செல்ல முடியாது.

அந்த தளத்தின் முன் பகுதியில் சிறு இடம் ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே தான் அவர்கள் உட்கார வேண்டும். அந்த பகுதியில் நாலு பிளாஸ்டிக் கதிரை போடப்பட்டுள்ளது.

உள்ளே ஏசியுடன் , சோபா சேற்றி போடப்பட்டு பெரிய காத்திருப்பு பகுதி இருக்கிறது. அங்கே யார் இருக்கலாம் என்றால் பெண்களுடன் வரும் பெண்கள் இருக்கலாம், இதான் நடைமுறை.

சரி ,

ஆண்களுக்கான சேவைகள் கீழ் தளத்தில் பெறலாம், பெண்களுக்கு என தனியுரிமை தேவை. அவர்களுக்கு சேவையை இலகுவாக பெற இந்த ஏற்பாடு. ஓகே அதில் சிக்கல் இல்லை.

அங்கே சேவை பெற செல்லும் ஆணை , உங்களுக்கான சேவை கீழ் தளத்தில் என அனுப்பி வைக்கலாம்.

ஆனால் பெண்கள் சேவை பெற செல்லும் போது கூட செல்லும் ஆணை வெளியே பிளாஸ்டிக் கதிரையில் இருத்தி வைப்பதன் நோக்கம் என்ன ??

தன் கணவனுடன் சேவை பெற பெண்ணொருவர் சென்றால் , கணவன் உள்ளே செல்ல முடியாது. அவர் வெளியே இருக்க வேண்டும். விசாரணைக்கு அழைக்கப்பட்டது போன்று அந்த பெண் மாத்திரம் உள்ளே செல்ல வேண்டும். அங்கே அவர்கள் எங்கள் வங்கியில் அது இருக்கு இது இருக்கு என சொல்லும் போது , ஒருக்கா அவரிட்ட கேட்கணும் என்றால் , ” ஏன் உங்களுக்கு தனிய முடிவெடுக்க முடியாதா ?” ,” எல்லாத்துக்கும் அவரையா கேட்பீங்க ?” என ஒரு வங்கி ஊழியராக தனது வாடிக்கையாளருக்கு கிளாஸ் எடுக்க முடியுமா ?

இல்ல என்ன என்றாலும் அவரிட்ட ஒருக்கா கேட்கணும் என சொல்லுபவரை , அவரை உள்ளே அனுமதிக்க முடியாது. போனில கதையுங்க, இல்லைன்னா வெளியே போய் கேட்டுட்டு வாங்க என சொல்லி அனுப்புறாங்க.. அந்த பெண் எதற்காக வங்கிக்கும் ,தன் கணவனுக்கும் இடையில் ஊடகமாக ஓடி திரியனும் ?

கணவன் – மனைவி இருவரையும் ஒன்றாக இருத்தி வைத்து , இப்படி ஒரு சேமிப்பு திட்டம் இருக்கு , மனைவி பெயரில் போட்டால் அவங்களுக்கு நல்லது என விளங்கப்படுத்துவதில் என்ன சிக்கல் ?? அதையே கீழ் தளத்தில் செய்கிறாங்க. மூன்றாம் தளத்தில் செய்ய மாட்டாங்க .. கேட்டால் பெண்கள் , பெண்களுக்கான தனியுரிமை என்கிறாங்க.

கணவனிடம் எதற்கு கேட்கணும் என நினைக்கும் சிங்க பெண்களோ ? அல்லது ஆண் துணையே தேவையில்லை என நினைப்பவர்களோ ? எதற்காக ஆண்களை அழைத்து வர போகிறார்கள் ???