யாழ்ப்பாணத்தின் புகழ்பூத்த அதிபர்களில் ஒருவரான அ.பஞ்சலிங்கம் அவர்கள் காலமானார்!!
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கை பிறப்பிடமாகவும் உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட கொக்குவில் இந்து மற்றும் யாழ் இந்துக் கல்லுாரிகளில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற புகழ்பூத்த அதிபர்களில் ஒருவரான அப்பாத்துரை பஞ்சலிங்கம் அவர்கள் இன்று அதிகாலை 89 வது வயதில் காலமானார். உரும்பிராய் மற்றும் திருநெல்வேலியில் பாலகர்களுக்கான திறன் விருத்தியை மேன்படுத்துவதற்காக “கிட்ஸ் பார்க்“ என்னும் ஆரம்ப கல்வி நிறுவனத்தை மிகவும் சிறப்பாக இறக்கும் வரை நடாத்தி வந்தவர் என்பதும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களின் தலைவராகவும் பொறுப்பாளராகவும் பணியாற்றிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




