இங்கிலாந்து நிறுவனத்தில் பலகோடி திருடிய ராஜ்சங்கர் பாலசிங்கம் இலங்கையில் தலைமறைவு
இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச நிறுவனத்தில் இலங்கை திருகோணமலையை சேர்ந்த ராஜ்சங்கர் பாலசிங்கம் (வயது 45) என்ற நபர் அந்த நிறுவனத்தில் இருந்து பலகோடி ரூபாய்களை மோசடியான முறையில் சுருட்டிக்கொண்டு குடும்பத்துடன் இலங்கையில் தலைமறைவாகி உள்ளார். இவரின் சகாவான மோசடி மன்னன் மொட்டை ஜெயராசா என்று அழைக்கப்படும் தருமரத்தினம் ஜெயராஜ் (வயது 50) என்பவனும் தற்போது இலங்கையில் ஒளிந்து உள்ளான் . இங்கிலாந்து நிறுவனத்தில் ஒரு சிற்றூழியராக இணைந்த ராஜ்சங்கர் தான் இலங்கை மக்களுக்கு சேவை செய்ய துடிப்பவன் போல நடித்து இலங்கையில் அந்த நிறுவனத்தால் நடாத்தப்படும் பல மனிதநேய பணிகளை தானே முன்னின்று நடாத்தும் பொறுப்புக்களை எடுத்துள்ளார் .
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நூற்றுக்கணக்கான வீடுகளை இலவசமாக அமைத்துக்கொடுத்து தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும்கட்டி எழுப்பவேண்டும் என்று அந்த நிறுவனத்தின் தர்ம ஸ்தாபன கிளை முடிவு எடுத்தபோது தனது சூழ்ச்சிகளை பாவித்து அந்த பொறுப்பை தானே பெற்றுக்கொண்டார்.வீடு கட்டும் செயல் திட்டங்களை வன்னியில் தொடங்கிய இவர் தெரிவு செய்த இடங்கள் மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டுப்பகுதிகள் ஆகும். காடழிப்பு செய்ததுடன் பெறுமதி மிக்க காட்டுமரங்களைவெட்டி விற்றதும் கிடைத்த இடங்களில் எல்லாம் பாரிய மணல் கொள்ளையிலும் இவர் ஈடு பட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது .
இவர்மீது அதீத நம்பிக்கை கொண்டதால் நிறுவனம் இவரை கண்காணிக்க தவறியுள்ளது, கட்டி முடிந்த வீடுகளை வழங்க வறிய மக்களை தெரிவு செய்யும் செயலிலும் ஈடுபட முனைந்த ராஜ்சங்கர் மிகவும் கீழ்த்தரமான வழிகளையும் கையாள தொடங்கியுள்ளார் . இந்த தகவல்களை ஆதாரபூர்வமாக அறிந்து அதிர்ச்சியடைந்த இங்கிலாந்து நிறுவனம் இவரை பணியிடை நீக்கம் செய்து உடனடியாக விசாரணைக்கு அழைத்தது மட்டுமல்லாது இங்கிலாந்து இலங்கை காவல் துறையிலும் முறைப்பாடுகளை செய்தது ,ஆனாலும் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என காரணம் காட்டி தற்போது என்னால் இங்கிலாந்து வரமுடியாது என்று கூறிக்கொண்டு குடும்பத்துடன் இலங்கையில் தலைமறைவாகியுள்ளார் ராஜ்சங்கர் என்றமோசடி ஆசாமி .
ராஜ்சங்கரின் ன் திருட்டுக்களை அறிந்து உசாரான நிறுவனம் உடனடியாக இவர் முன்னர் மேற்கொண்ட பணிகள் தொடர்பான ஆவணங்களை துருவி ஆராய மேலும் அதிர்ச்சிகள் காத்து இருந்தன ,எந்த விதமான பணிகளும் நடைபெறாமலேயே பல மோசடி ஆவணங்களை சமர்ப்பித்து ராஜ் சங்கரும் மொட்டை ஜெயராசாவும் இணைந்து ஆயிரக்கணக்கான பவுண்ஸ்களை ஆட்டையை போட்ட தவகல்கள் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது . இதில் மொட்டை ஜெயராசா என்பவன் இலங்கையில் தொன்னூறுகளில் ஏற்கனவே பல மோசடிகளை புரிந்து விட்டு இங்கிலாந்து தப்பி வந்து அரசியல் தஞ்சம் புகுந்த நபர் ஆவான் . திருட்டுதனமாக சன் டிவி , விஜய் டிவி தொலைக்காட்சி அலைவரிசைகள் இணைத்து ஆர்த்தி டிவி என்ற பெயரில் இணைப்பு பெட்டிகளை விற்று பிழைப்பு நடத்தி வந்த இவன் மீது தென்னிந்திய டிவி நிறுவனங்கள் வழக்கு தொடர முற்பட்ட வேளையில் ராஜ்சங்கர், அனீஸ் (இந்திய முஸ்லீம் நபர்) ஆகியோருடன் மோசடிகளில் ஈடுபட்டு பொதுமக்களின் பணங்களை கையாடத்தொடங்கினான்.
வயோதிப பெண்கள் மீது பாலியல் வக்கிர மோகம் கொண்ட இந்த மொட்டை ஜெயராசா மோசடியாக திருடிய பொது மக்களின் பணத்தை வைத்து இலங்கையில் வயோதிப விலைமாதுகளுடன் உல்லாச சல்லாபம் அனுபவித்து பணத்தை கரைத்துள்ளான் , இவனுடைய பாலியல் நடத்தை குறித்து இவனால் பல ஆண்டுகால பாலியல் அடிமையாக நடாத்தப்பட்ட நீத்தா என்ற வயோதிப பெண்மணி தெரிவித்த கண்ணீர் வாக்குமூலத்தில் மேற்கண்ட அசிங்ககள் தெரியவந்தன . ராஜ்சங்கர் தான் திருடிய பணத்தை புத்திசாலித்தனமாக பல பினாமி பெயர்களில் முதலீடு செய்து இலங்கையிலும் இங்கிலாந்திலும் பல சொகுசு மாடி குடியிருப்புகளை சொந்தமாக வாங்கியுள்ளார் . ராஜசங்கரின் சகோதரர் முறையான பிரசன்னா, பிரசன்னாவின் மனைவி ,ராஜ் சங்கரின் மனைவி உமா ராஜ்சங்கர் ,மைத்துனி சுபா ஞானசேகரன் மாமனார் ஞானசேகரன் ஆகியோர் இதில் அடங்குவர்
ராஜ்சங்கர் அல்லது இவரது சகபாடிகள் பற்றிய தகவல்கள் அறிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவும் இவரை பற்றிய தவகல்களை தெரிவிப்போர்களுக்கு சன்மானம் ஒன்றை வழங்கவும் இங்கிலாந்து நிறுவனம் முடிவு செய்துள்ளது . இலங்கை தமிழ் மக்களுக்கு என்று வழங்கிய நிதியை துஸ்பிரயோகம் செய்த இந்த கயவர்களை நீதியின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழக்கும் வரை ஓய்வதில்லை என இங்கிலாந்து நிறுவனம் திட சங்கற்பம் பூண்டு உள்ளது .

