Home புதினங்களின் சங்கமம் அரசாங்கம் கொடுத்த வெள்ள நிவாரண பணம் 25,000 ரூபாவில் Facial செய்த தாய் மற்றும் மகள்!

அரசாங்கம் கொடுத்த வெள்ள நிவாரண பணம் 25,000 ரூபாவில் Facial செய்த தாய் மற்றும் மகள்!

வெள்ள நிவாரணப் பணிகளுக்காகக் கிடைத்த பணத்தில் தாய் மற்றும் மகள் முக அழகு செய்த விசித்திரச் சம்பவம் ஒன்று ஜா-எலவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தால் ரூபா 25,000/- நிதி வழங்கப்பட்டது. ஜா-எல பிரதேசத்தில் சிறிய அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டிற்கும் இந்த நிதி கிடைத்துள்ளது.

வீட்டைச் சுத்தம் செய்வதற்கு முன், அந்த வீட்டில் இருந்த தாயும் மகளும் கிடைத்த பணத்தின் பெரும் பகுதியைப் பயன்படுத்தி, ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஒரு அழகு நிலையத்திலிருந்து (Beauty Parlour) முக அழகு (Facial) செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.