புதினங்களின் சங்கமம்

மினிப்பே – நெலும்கம பகுதியில் மண்சரிவில் சிக்கிய 22 பேரின் சடலங்கள் மீட்பு!

மினிப்பே – நெலும்கம பகுதியில் மண்சரிவில் சிக்கிய 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. மினிப்பே – நெலுங்கம பகுதியில் மொத்தம் 16 வீடுகள் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 12 வீடுகள் மண்சரிவில் சிக்குண்டுள்ளன.

மண்சரிவுக்குள்ளான 16 வீடுகளில் வசித்த 30 பேர்களில் 22 சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.தொடர்ந்தும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.